» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவன் மீது தாக்குதல்: டி.எஸ்.பி. விசாரணை
வியாழன் 22, செப்டம்பர் 2022 3:09:24 PM (IST)
தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணவர்கள் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி பேருந்தில் வீடுதிரும்பும் போது, பஸ்சில் இடம்பிடிப்பது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 6-ம் வகுப்பு மாணவன் ஒருவன், மற்றொரு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவன் தன் தந்தையிடம் கூறி உள்ளான்.
இதையடுத்து அவர் அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று 6-ம் வகுப்பு மாணவனை தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 11:49:47 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வியாழன் 30, நவம்பர் 2023 11:29:34 AM (IST)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் பலி
வியாழன் 30, நவம்பர் 2023 10:56:10 AM (IST)

வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 10:22:17 AM (IST)
