» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - நாசரேத் டயோசீசன் சிறப்பாக செயல்படுகிறது : ஏடிஜே ஜெயசீலன் பேட்டி

புதன் 21, செப்டம்பர் 2022 12:38:10 PM (IST)தூத்துக்குடி - நாசரேத் டயோசீசன் எஸ்டிகே ராஜன் அணியில் இருந்த முன்னாள் எம்பி ஏடிஜே ஜெயசீலன் டிஎஸ்எப் அணியில் இணைந்தார். 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் டிஎஸ்எப் துரைராஜ் தலைமையில் ஒரு அணியும் எஸ்டிகே ராஜன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. இதில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் டி.எஸ்.எப். துரைராஜ் அணி அமோகமாக வெற்றி பெற்று லே செயலாளராக துரைராஜ் மகன் கிப்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவரது தலைமையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் எஸ்டிகே ராஜன் அணியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்பி ஏடிஜே ஜெயசீலன், அவரது துணைவியார் கமலி ஜெயசீலன் ஆகியோர் இன்று டிஎஸ்எப் துரைராஜ் அணியான லே செயலாளர் கிப்சனுக்கு சால்வை அணிவித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறும்போது "நான் திமுக கட்சியை கட்சியில் இருந்தாலும். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். தற்போது லே செயலாளர் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடந்து வருகிறது. இந்த நிர்வாகத்தை மேலும் மேம்படுத்த இணைந்து செயல்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

JOSEPH KANAGARAJSep 21, 2022 - 03:12:26 PM | Posted IP 162.1*****

நீங்களே சொல்லுங்க எங்கே எந்த பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு தாளாளரா உங்களை போடணும்??

தூத்துக்குடிSep 21, 2022 - 01:26:49 PM | Posted IP 162.1*****

காசு பணம் துட்டு மணி மணி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory