» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் துவக்கம் : அமைச்சர், எம்பி பங்கேற்பு!
வெள்ளி 16, செப்டம்பர் 2022 11:46:06 AM (IST)

தூத்துக்குடி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி முதற்கட்டமாக குறிப்பிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராமங்களில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி டூவிபுரம், மாநகராட்சி துவக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினர்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் பாலதண்டாயுத பாணி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு மனைகளில் தண்ணீர் தேங்கினால் நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி
வியாழன் 30, நவம்பர் 2023 1:12:45 PM (IST)

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர் பயிற்சி கூடாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 30, நவம்பர் 2023 11:49:47 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி ஆண்டு விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வியாழன் 30, நவம்பர் 2023 11:29:34 AM (IST)

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வாலிபர் பலி
வியாழன் 30, நவம்பர் 2023 10:56:10 AM (IST)

வேளாண் திட்டத்திற்கு ரூ.34 கோடி கடன் வழங்க இலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!
வியாழன் 30, நவம்பர் 2023 10:38:42 AM (IST)
