» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 102 வயது முதியவருக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

வெள்ளி 9, செப்டம்பர் 2022 1:56:24 PM (IST)தூத்துக்குடியைச் சேர்ந்த 102 வயது விவசாயிக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கே.ஜி. மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி போல்பேட்டையில் கே.ஜி.நர்ஸிங் ஹோம் இயங்கி வருகிறது. இங்கு எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோகுலகிருஷ்ணன் தலைம மருத்துவராக செயல்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த 102 வயது விவசாயி கந்தசாமி இடுப்பு எலும்பு ஒடிந்த நிலையில் கே.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாறு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. 102 வயதான அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது சவாலான விசயமாகும். 

விவசாயியின் உடல் நிலைமையை அறிந்த மருத்துவர் கோகுலகிருஷ்ணன் இதய நோய் நிபுணரின் ஆலோசனைக்கு பின் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு இடுப்பு எலும்பு மூட்டு மாறு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். மயக்கவியல் நிபுணர் டாக்டர் சாந்தி மற்றும் செவிலியர் குழு உடனிருந்து இந்த சிகிச்சைக்கு உதவியாக இருந்தனர்.

இதுகுறித்து மருத்துவர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில், ஆரோக்யமாக வாழ்வதே சிரமமாக இருக்கும் இந்த காலத்தில் 102 வயது முதியவர் நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி தற்போது ஆரோக்யமாக உள்ளார் என்பதைவிட மறுநாளிலே நடந்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது.  விவசாயி கந்தசாமி 102 வயதிலும் உடல் மற்றும் மன ஆரோக்யத்தை பேணி காத்ததுதான் எனது அறுவை சிகிச்சையின் வெற்றிக்கும் காரணம். சத்தான உணவை உட்கொண்டால் 100 வயதிற்க்கும் மேலும் கூட‌ வாழலாம் என்றார். 

தமிழகத்தில் இது போன்ற வயதானவர்களுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முதியவர் தற்போது நடந்து வருகிறார் என்பது நவீன மருத்துவத்தின் அரிதான சாதனையாகும். தூத்துக்குடி கே.ஜி.நர்ஸிங் ஹோம் கடந்த 40 ஆண்டு காலமாக மருத்துவத்துறையில் சாதணையை நிகழ்த்தி வருகிறது. இந்த சாதனையை மருத்துவமனை நிர்வாகம் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

V.Jesiah ratharajSep 13, 2022 - 11:12:50 AM | Posted IP 162.1*****

சாதனை தொடர வாழ்த்துகள்! மருத்துவர் கோகுல்கிருஸ்ணன் நோயாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர்,மிகவும் பண்பானவர்,தைரியம் தருபவர்,சிறந்த மருத்துவம் தருபவர்...

Subbiah . LupinSep 9, 2022 - 03:21:57 PM | Posted IP 162.1*****

மிகவும் அருமை டாக்டர். உங்கள் சாதனைக்கு சேவைக்கும் இது ஒரு மைல் கல். உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துகள்.பா. சுப்பையா, லூபின்

AMERNATH SSep 9, 2022 - 02:42:32 PM | Posted IP 162.1*****

s

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory