» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் முத்துரம் உரம் : தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அறிமுகம்!!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:57:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விற்பனை செய்யும் வகையில் முத்துரம் என்ற லோகோவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து எடுக்கப்பட்டு மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான நுண்உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், உள்ள விவசாயப் பணிகளுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் உரத்தினை வழங்க முத்துரம் என்ற பெயரில் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு லோகோவை அறிமுகப்படுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் உள்ள தருவை குளம் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. குப்பையில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரித்து எடுக்கப்பட்டு தொடர்ந்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான நுண்உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது முத்துரம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உரத்தை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி வளாகத்தில் உள்ள விவசாயப் பணிகளுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உரத்தினை பொது மக்களுக்கு ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் வீதம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளோம் மக்கும் உரத்தை தயாரிப்பதற்கு 30 முதல் 34 நாட்கள் ஆகும் என்று கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் தூத்துக்குடி நகர் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடைபெற உள்ளது இதற்காக இந்த உரம் பயன்படுத்தப்பட உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் தேரடி மணி மதுரை வேளாண்மை பல்கலைக்கழக இணை பேராசிரியை பாக்கிய சாமியா நபிக் மாநகராட்சி இன்ஜினியர் ரூபன் ஜார்ஜ் பொன்னையா சுகாதார அலுவலர் டாக்டர் அருண் குமார் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியாக, சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என மாநகராட்சி மேயர், ஜெகன் பெரியசாமி ஆணையர், சாரு ஸ்ரீ அதிகாரிகள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)

தூத்துக்குடியில் உலக எய்ட்ஸ் தின பேரணி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:44:00 AM (IST)

அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:37:02 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.40லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு: ஒருவர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 10:29:42 AM (IST)
