» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன்,  3 இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர், 1 தலைமைக் காவலர், 7 காவலர்கள் ஆகிய 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.

போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்.

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது. போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது. இவ்வாறாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

காவல்துறைக்கு ஒரு சட்டம் , சாமானியனுக்கு ஒரு சட்டம்Aug 19, 2022 - 09:52:01 AM | Posted IP 162.1*****

அந்த தண்டனை என்ன ? ஆயுதப்படைக்கு இடமாற்றமா? 50 வருஷம் ஆகுமா ??

BhuvanenthiranAug 18, 2022 - 11:42:17 PM | Posted IP 162.1*****

அனைவருக்கு என்ன தண்டனை கொடுப்பிங்க மேடம் பணி நீக்கம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுங்க மேடம்

கடவுள் இருக்கிறார்Aug 18, 2022 - 09:33:59 PM | Posted IP 162.1*****

ஆம் , அண்ணா நகர், போன்ற சில தெருக்களில் ஓடி சுட்டு கொன்றார்கள் , ரொம்ப நாள் கழித்து தான் தெரியுதோ. முதல்ல சுட்டு கொன்ற போலீசார்களால் தான் பெரிய பிரச்னை . சீக்கிரம் தண்டனை கொடுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory