» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமியை கடத்திய வாலிபர் : போலீஸ் விசாரணை!

புதன் 10, ஆகஸ்ட் 2022 10:33:57 AM (IST)

விளாத்திகுளத்தில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த 16வயது சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்வரது மகளான 16 வயது சிறுமி நேற்று மாலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பைக்கில் வந்து கடத்தி சென்று விட்டாராம். இதையடுத்து தங்க மணி மற்றும் உறவினர்கள் பைக்கை விரட்டி சென்ற போதும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory