» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை திருடிய 3பேர் கைது

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 9:09:10 PM (IST)

விளாத்திகுளம் அருகே நெடுஞ்சாலையில் எச்சரிக்கைபலகை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம் - தூத்துக்குடி செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில், விபத்து பகுதி மற்றும் வளைவு பகுதிகளில் முன்னெச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் இரும்பு பலகைகள் வைக்கப்பட்டு பராமரிப்பு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கும் - மீனாட்சிபுரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த 10 எச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் 11 பிரதிபலிப்பாக இரும்பு பலகைகள் திருட்டப்பட்டது. 

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஆதியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் நேற்று இரவு இந்த இரும்பு பலகைகளை திருடிய வேம்பாரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அந்தோணி ஜேம்ஸ் (வயது 25), நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுத்து மகன் கருப்பசாமி (42) மற்றும் ராமசாமி மகன் ஆத்தி (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இத்திருட்டுக்கு பயன்படுத்திய மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory