» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி மோதி மின்கம்பங்கள் சேதம்: ஒப்பந்தக்காரருக்கு அபராதம்

செவ்வாய் 28, ஜூன் 2022 8:22:15 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதி மின்கம்பங்கள் சேதமடைந்த சம்பவத்தில் ஒப்பந்தக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் வைப்பதற்காக ஒட்டக சிவிங்கி, டைனோசர், மயில் போன்ற சிமெண்டில் செய்யப்பட்ட உருவங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை ஒப்பந்தக்காரர் லாரி மூலம் நேற்று காலையில் கொண்டு சென்றார். லாரி தேவகிநகர் பகுதியில் பக்கிள் ஓடையை ஒட்டிய சாலையில் சென்ற போது, மேலே சென்ற மின்சார ஒயரில் சிக்கி இழுத்தது. 

இதில் அந்த பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன. அந்த நேரத்தில் பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கம்பத்தை சேதப்படுத்திய ஒப்பந்தகாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory