» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில்விவசாயிகள் போராட்டம்

செவ்வாய் 28, ஜூன் 2022 4:36:39 PM (IST)



திருவைகுண்டம் அணையில் இருந்து வடகால் பாசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 1000 கண‌ அடி தண்ணீர் திறந்து விட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு தலைமை வகித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் பேசியதாவது "தூத்துக்குடி மாவட்டத்தில் வடகால் பாசனம் பகுதியில் விவசாய‌ம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பயிற்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரண‌மாக தண்ணீர் திறந்து விட பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால், இன்றைய தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிண்றோம். 

இதில் ஒரு பகுதி மக்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு பகுதியினரை தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல்துறையினர் வீடுகளில் இருந்து கிளம்பும்போது கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் சொல்வதற்கு கூட வாய்ப்பு வழங்காமல் தடுக்கக்கூடிய முறையில் தண்ணீர் கேட்க்கப் போகிறோம் என்று சொன்னதற்காக காவல்துறை கைது செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் இந்த மோசமான அனுகுமுறையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம்.

வடகால் பாசணத்தில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, போண்ற பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணாமாக வாடும் நிலையில் உள்ளது. சமீப காலமாக முன்கார் சாகுபடி  என்பது விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. நீண்ட காலமாக முன்கார் சாகுபடி மூலமாக கடைமடை பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள் நெல் பயிரிட்டு அதன் மூலம் வருவாய் பெற்று வந்தனர்.தற்போது முன்கார் சாகுபடி நிறுத்தியதும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

வரக்கூடிய காலத்தில் முன்கார் சாகுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பாபநாசம் அனையில் 40 அடி தண்ணீர் இருந்த போது நீர் திறக்கப்பட்டுள்ளது, தற்போது 60  அடி தண்ணீர் உள்ளது எனவே தண்ணீர் திறந்த விட மாவட்ட நிர்வாகம் தலையீட்டு நட்வடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புவிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் நம்பிராஜன், ஐ.கணபதி, சிபிஎம் ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவி சந்திரன், விவசாயிகள் தனுஷ்கோடி, ராமசந்திரன், ஸ்டான்லி கிஷோர் குமார், அருணாசல மணி, பட்டு முருகேசன், பழனிசாமி, ராஜ், ரொமல, பேச்சியம்மாள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மாவட்ட துணைத் தலைவர் தி.சீனிவாசன், திருவைகுண்டம் ஒன்றிய தலைவர் பொன்ராஜ் உட்பட 23 பேர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory