» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில்வே பாலம் குறித்து புகாரளித்த சமூக ஆர்வலர் வீட்டில் நோட்டீஸ் : தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவு

வியாழன் 12, மே 2022 11:34:41 AM (IST)

துாத்துக்குடியில் ரயில்வே பாலம் குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் வீட்டில் சம்மன் நோட்டீஸ் ஒட்டிய புகாரில் அவருக்கு தமிழக அரசு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கர். எம்பவர் நுகர்வோர் கல்வி இயக்கத்தின் செயல் இயக்குனர். தூத்துக்குடி-மதுரை 4 வழிச் சாலையில் நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் மீளவிட்டான் ரயில்வே பாலத்தை கட்டி விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்த ரவிடும்படி தமிழக மனித உரிமை ஆணையத்திற்கு 2020 ஜனவரியில் புகார் அளித்திருந்தார்.

மனித உரிமை ஆணையம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி அறிக்கை கேட்டிருந்தது. இந்த புகார் குறித்து தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியம், போலீஸ் ஏட்டு முனவர் ஷரீப், கிராம நிர்வாக அதிகாரி பராசக்தி, தலையாரி சுந்தர் ஆகியோர், மனித உரிமை ஆணைய விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சங்கர் வீட்டுக் கதவில் சம்மன் உத்த ரவை ஒட்டிச் சென்றனர்.

ஒரு பொது பிரச்னைக்கு புகார் அளித்ததற்காக பொதுமக்கள், அக்கம் பக்கத்தினர் தெரியும் வகையில் தன் வீட்டுக் கதவில் சம்மன் ஒட்டிய போலீஸ் மற்றும் வி.ஏ.ஓ., தலையாரி மீது மனித உரிமை ஆணையத்தில் மீண்டும் புகார் அளித்தார். இதனை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன், பொது பிரச்னைக்கு புகார் அளித்த சங்கர், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தலைவராகவும் உள்ளார். எனவே அவர் வீட்டில் சம்மன் ஒட்டியது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் சங்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தொகையை தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

கே.கணசன்மே 13, 2022 - 09:53:14 PM | Posted IP 162.1*****

அருமையான நடவடிக்கைகள். வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory