» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்!

வியாழன் 20, ஜனவரி 2022 3:47:02 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 21பேருக்கு, கூடுதல் கண்காணிப்பாளர் கோபி வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹெராயின் எனும் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க செயினை பறித்து சென்ற எதிரிகளை 3 மணி நேரத்தில் கைது செய்து, 3 பவுன் தங்க செயினையும் பறிமுதல் செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் முதல் நிலைக் காவலர் ஆனந்தகுமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கின் எதிரியை சம்பவம் நடந்த 18 மணி நேரத்திற்குள் கைது செய்த ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் குணசேகரன், சேரகுளம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர்கள் வேம்புராஜ், ஆனந்தராஜ், சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் கைலயங்கிரிவாசன், குரும்பூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் முத்துக்குமார் மற்றும் ஏரல் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் நாராயணசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 427 மதுபாட்டில்கள் வைத்திருந்த எதிரியை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கைப்பற்றிய ஸ்ரீவைகுண்டம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், குரும்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார், தலைமை காவலர் பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு முதல்நிலை காவலர் சந்தோஷ்செல்வம் மற்றும் ஏரல் காவல் நிலைய காவலர் ஆனந்த கணேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தி சென்ற எதிரிகளை கைது செய்து 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் மாடசாமி, புதூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பரசுராமன் மற்றும் மாசார்பட்டி காவல் நிலைய காவலர் பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்து அவரிடமிருந்து திருடுபோன 11 சவரன் நகைகளை மீட்ட விளாத்திகுளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன், காவலர்கள் சிங்கராஜ் மற்றும் குருசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 21 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  இந்நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory