» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை எம்ஜிஆர் பிறந்த நாள் விழா : அதிமுக மாவட்ட செயலாளர் அறிக்கை!

ஞாயிறு 16, ஜனவரி 2022 10:09:11 AM (IST)

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா நாளை (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கை: மறைத்த தமிழக முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா 17-01-2022 (திங்கள்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு தெற்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் எனது தலைமையில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. 

பின்பு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக, மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி, வார்டு கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

இதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ படத்தினை அலங்கரித்து மாலை அணிவித்து தலைவரின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory