» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணியாளர் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 9, டிசம்பர் 2021 10:21:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைநிலை சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக மாநில அளவில் துணை சுகாதார நிலைய நலவாழ்வு மையங்களில் 4848 இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணியிடங்களும், 2448 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்)/சுகாதார ஆய்வாளர் நிலை-II பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 180 இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணியிடம் ரூ.14,000 ஒப்பந்த ஊதியத்திலும் 90 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II பணியிடம் ரூ.11,000 ஒப்பந்த ஊதியத்திலும் நிரப்பப்பட உள்ளன. இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணியிடத்திற்கு செவிலியர் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடத்திற்கு இரண்டு வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் கல்வி தகுதியினை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரு பணியிடங்களுக்கும் வயது உச்சவரம்பு 50 ஆகும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. http://nhm.tn.gov.in என்ற தேசிய நலவாழ்வு குழும வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் தூத்துக்குடி அலுவலகத்தில் 15.12.2021-க்குள் அளிக்கலாம் என  மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory