» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒய்.எம்.சி.ஏ சார்பில் கிறிஸ்துமஸ் கீதபவனி

புதன் 8, டிசம்பர் 2021 8:01:57 PM (IST)தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக ஒய்.எம்.சி.ஏ சார்பில் கிறிஸ்துமஸ் கீதபவனி நடந்தது.

தூத்துக்குடியில் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது. ஒய்.எம்.சி.ஏ., தலைவர் டி.எஸ்.எப். துரைராஜ் தலைமை வகித்தார். ஆராதனையை போதகர் எட்வின் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஒய்.எம்.சி.ஏ பாடகர் குழுவோடு தேவநேச இருதயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பாடகர் குழு, ஹார்பர் சி.எஸ்.ஐ. ஆலய பாடகர் குழு, மருத்துவக் கல்லூரி மாணவியர்கள், மற்றும் அன்னை வேளாங்கன்னி ஆலய பாடகர் குழுக்கள் இணைந்து கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினர். 

அருட்தந்தை ஜெரால்டு ரவி கிறிஸ்துமஸ் நற்செய்தி அளித்தார். கிறிஸ்துமஸ் கீத பவனியை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் டி.எஸ்.எப்.துரைராஜ் பரிசு வழங்கினார். ஆன்லைன் போட்டிக்கான ஏற்பாடுகளை சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும், ஒய்.எம்.சி.ஏ நிர்வாககுழு உறுப்பினருமான ஜாய்பெல் ஸ்டான்லி செய்திருந்தார்.

இதில், ஒய்.எம்.சி.ஏ துணைத் தலைவர் வக்கீல் ஸ்டான்லி வேத மாணிக்கம், வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் ஜான் பிரின்ஸ், நிலா சீ புட்ஸ் உரிமையாளர் செல்வின் பிரபு சந்திரன், பி.எஸ்.எஸ் ஜெயம் உரிமையாளர் ஸ்டான்லி பிரின்ஸ், இன்ஜினீயர் விஜயராஜன், தனேஷ், ஜோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒய்.எம்.சி.ஏ. பொருளாளர் சார்லஸ் சுந்தர்சிங், செயலாளர் ராபர்ட் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory