» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு

புதன் 27, அக்டோபர் 2021 5:43:47 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை, நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் பார்வையிட்டு இன்று (27.10.2021) ஆய்வு செய்தார்கள். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகராவ், மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்கிறோம். வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையங்களை தற்பொழுது ஆய்வு செய்துள்ளோம். இந்த பயிற்சி நிலையங்களில் அதிகமான மாணவர்கள்; வயர்மேன் டிரேடு, எலட்ரிசியன் டிரோடு, பிட்டர் போன்ற டிரேடுகளில் மாணவர்கள் அதிகமான அளவுக்கு சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தொழிற் பயிற்சி நிலையங்கள் அனைத்தும் பராமரிக்கப்படாமல் இருந்த காரணத்தினால் சுமார் 40000 மாணவர்கள் படித்திருக்க வேண்டிய நிலையில் தற்பொழுது சுமார் 25000 மாணவர்கள்தான் படிக்கின்ற நிலை இருக்கின்றது.

எனவே அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தி இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டமாகவும் உள்ளது. வேலைவாய்ப்பை பெற்ற தர வேண்டும் என்ற நோக்கத்திலே எந்தெந்த தொழிற்கல்வி நிலையங்களில் எந்தெந்த டிரோடுக்கு அதிகமான மாணவர்களிடத்தில் ஆர்வம் இருக்கிறது எந்தெந்த டிரேடு படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்றதோ என்பதனை கண்டறிந்து படித்த இளைஞர்களுக்கு தனியார் துறையிலோ அல்லது அரசு துறையிலோ வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதில் தமிழக அரசு திட்டவட்டமாக உள்ளது.

புதிய பயிற்சியை எல்லாம் உருவாக்குதற்குத்தான் இந்த ஆய்வு நடைபெறுகிறது. வேப்பலோடை தொழிற்பயிற்சி நிலையத்தில் அதிகமான அளவுக்கு மாணவர்கள் எலட்ரிசியன் டிரேடு, ஒயர்மேன் டிரேடுகளில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர். ஆகவேவரும் கல்வி ஆண்டில் இன்னும் கூடுதலாக ஒவ்வாரு டிரேடுலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக ஏன் இந்த ஐடிஐயை விரிவுப்படுத்தணும், ஏன் அதிகரிக்கணும் என்று கேட்டால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர தயாராக இருக்கிறது. 

முதலமைச்சர் திறன் மேம்பாட்டு துறைஎன்று ஒருதுறையை உருவாக்கி அதன் மூலமாக இந்தஆண்டுமட்டுமே 300 கோடி ரூபாய் அதற்கான நிதி ஆதாரம் தயாராக இருக்கிறது. இதுபடித்து முடித்த பிறகு தகுதி வாய்ந்த நிறுவனங்களில் பணி செய்கையில் அவர்களுக்கு தேவைப்படுகின்ற கூடுதலான பயிற்சி அளித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கௌ;ளப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களிலே இருக்கின்ற பழைய சாதனங்களை மாற்றவும், கட்டடங்களை புணரமைக்கவும், தேவையான உபகரணங்களை வாங்;கவும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மண்டல பயிற்சி இணை இயக்குநர் ராஜ்குமார், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்லக்கனி, நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன், ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory