» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: 6 அதிகாரிகள் நியமனம்

புதன் 27, அக்டோபர் 2021 3:51:29 PM (IST)

டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி தேர்தல் அதிகாரிகள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்கத்தில் விடுபட்ட 9 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக தேர்தலை முடித்து விட்டது. தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து ஆகிய நகர்புற உள் ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்களுக்கான தேர் தலுக்கான வாக்காளர் பட்டியலை வரும் நவம்பர் 1ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தயாரித்து, நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. 

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டில் வரன்முறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கும் என்று கூறப்படுகிறது. நகர்புற உள்ளாட்சிகளுக்கு உரிய வாக்காளர் பட்டியல் மற்றும் ஒட்டுச்சாவடி பட்டியலை அடுத்த மாதம் நவம்பர் 25ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அதற்கு ஏற்ப பணிகளை முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு நவம்பர் மாதம் 20க்கும் தேதிக்கு பிறகு 25ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிவிக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாத இறுதி யில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

துாத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ செயல்படுவார். உதவி தேர்தல் அதி காரியாக 10 வார்டுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். 10 வார்டுகளுக்கு வேட்பு மனுக்களை உதவி தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். துாத்துக்குடி மாநகராட்சியில் உதவி தேர்தல் அதிகாரிகளாக மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் வித்யா, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ரூபன் சுரேஷ் பொன்னையா (பணிகள்), ரங்கநாதன் (திட்டம்), உதவி ஆணையர் (பொது) சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் கிழக்கு மண்டலம் சரவணன், தெற்கு மண்டலம் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடி மாநக ராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. ஒவ்வொரு உதவி தேர்தல் அதிகாரிக்கும் 10 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நகர்புற் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால் இந்த பதவிக்கு வருவதற்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

K.T.M.RajaOct 27, 2021 - 04:35:09 PM | Posted IP 173.2*****

வணக்கம் வார்டு கவுன்சிலர்‌ தீர்வு செய்யாத மேயர் மக்களால் தேர்வு செய்யும் மேயர் வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory