» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிதாக 4 கண்காணிப்பு கேமராக்கள் : எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்!

புதன் 27, அக்டோபர் 2021 12:24:08 PM (IST)



தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 4 கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள போல்டன்புரம் 2வது தெரு ஜங்ஷன் பகுதியில் தூத்துக்குடி மாநகர கார்த்திக் மக்கள் நல மன்றம் சார்பாக புதிதாக 4 சி.சி.டி.வி கேமாராக்கள் அமைக்கப்பட்டு, இந்த சிசிடிவி கேமராக்களை போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் மின்திரை மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், காவல்துறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுனைமுருகன், தென்பாகம் உதவி ஆய்வாளர் சிவக்குமார், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கார்த்தி மக்கள் நல மன்ற உறுப்பினர்கள்;, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Oct 27, 2021 - 07:53:21 PM | Posted IP 162.1*****

இந்த மாதிரி நல்ல விஷயங்களை அனைத்து முன்னணி நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் செய்ய முன் வரவேண்டும். நகரின் எல்லா பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைத்து தூத்துக்குடி நகரை அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும் .வாழ்த்துக்கள்.

K.T.M RajaOct 27, 2021 - 04:29:41 PM | Posted IP 162.1*****

நல்ல செய்தி வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory