» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்ட அரசு மருத்துவர்: கொலை மிரட்டல் வழக்கில் கைது

திங்கள் 25, அக்டோபர் 2021 9:30:33 PM (IST)

கோவில்பட்டி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பெண் பணியாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர் கைது செய்யப் பட்டார்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சையதுஅலி மனைவி நீலவேணி (36). இளையரச னேந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறாராம். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மு.குருசாமி (51), மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் தகாத செயலில் ஈடுபட்டதை நீலவேணி பார்த்து விட்டாராம். இதையடுத்து மருத்துவர் குருசாமி, நீலவேணியை அவமரியாதை செய்து வந்தாராம்.

நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் செல்போனை வைத்துவிட்டு, கழிப்பறைக்கு சென்ற நீலவேணி, திரும்பி வந்து பார்த்த போது, ஓய்வு அறையில் வைத்திருந்த செல்போனை காணவில்லையாம். அதையடுத்து மருத்துவரிடம் நீலவேணி கேட்டதற்கு அவரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து நீலவேணி அளித்த புகாரின் பேரில், மேற்கு  போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் ஆலோசனையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார், மருத்துவமனை பெண் பணியாளரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் குருசாமியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து

ராஜாOct 26, 2021 - 04:10:16 PM | Posted IP 162.1*****

dont give bail

ராஜாOct 26, 2021 - 04:09:27 PM | Posted IP 173.2*****

take action

adaminOct 26, 2021 - 10:26:48 AM | Posted IP 162.1*****

கிழட்டு நரிகளுக்கு குசும்பு அதிகம். ஜாக்கிரதை பெண்களே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory