» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை

திங்கள் 25, அக்டோபர் 2021 4:13:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் நடைபெற்று வருகின்றது. 

இதனால் முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும், மாற்றுத் திறனாளிகளும் மூன்றாவது மாடிக்கு ஏறி வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்பொழுது தரை தளத்தில் உள்ள சங்கு கூடத்தில் கோவிட் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதை மற்றொரு இடத்திற்கு மாற்றிவிட்டு மீண்டும் தரைதளத்தில் உள்ள சங்கு கூடத்திலேயே திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 
மக்கள் கருத்து

K.GANESHANOct 25, 2021 - 10:14:15 PM | Posted IP 162.1*****

நியாயமான கோரிக்கை. கோரிக்கையை பரிசீலிக்க கலெக்டரிடம் கோரிக்கை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory