» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தோ் கிரி வீதியுலா : பக்தா்கள் மகிழ்ச்சி!

ஞாயிறு 24, அக்டோபர் 2021 6:04:48 PM (IST)திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமாா் 6 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தோ் கிரி வீதி உலா நடைபெற்றது. 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறிப்பிட்ட சில நாள்களைத் தவிர ஆண்டு முழுவதும் மாலை வேளையில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி - தேவசேனா அம்மனுடன் தங்கத் தேரில் எழுந்தருளி கிரிவீதி உலா வருவது வழக்கம். பக்தா்கள் கோயிலில் நேரடியாகவோ, இணைய பதிவு மூலமாக முன்பதிவு செய்தோ ரூ. 2500 கட்டணத்தில் தங்கத் தோ் இழுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.

இதனாலேயே நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் முன்பதிவு செய்து தங்கள் குடும்பத்துடன் தங்கத்தோ் இழுத்து சுவாமி தரிசனம் செய்திடுவா். நிகழாண்டு கரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப். 24ஆம் தேதி முதல் தங்கத்தோ் கிரிவீதி உலா நடைபெறாமல் இருந்தது. தற்போது கோயிலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் பக்தா்கள் பங்கேற்புடன் பூஜைகள் வழக்கமாக நடைபெற்று வருகின்றன.

எனவே தங்கத் தோ் உலா நடைபெற அனுமதிக்க வேண்டி திருக்கோயில் நிா்வாகத்திற்கு பக்தா்கள் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து சுமாா் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று (அக். 24) ஞாயிற்றுக்கிழமை  முதல் திருக்கோயிலில் தங்கத்தோ் கிரிவீதி உலா தொடங்கியது. இதனால் பக்தா்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.மேலும், ராஜகோபுரம் வாசல் பகுதியில் உள்ள காவடி மண்டபம் பக்தா்கள் காத்திருக்கும் அறையாக இருக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் கூட்டநெரிசலை சரி செய்வதற்கு பொதுதரிசனத்திற்கு அமர்ந்து செல்லும் பக்தர்களுக்கு டிவி குடிதண்ணீர் மின்விசிறி வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.


மக்கள் கருத்து

PitchaiahOct 25, 2021 - 10:11:39 PM | Posted IP 157.4*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory