» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண்டலத் தேர்தல் விவகாரத்தில் இரு தரப்பினர் மோதல்: போலீஸ் குவிப்பு -தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 21, அக்டோபர் 2021 2:41:55 PM (IST)



தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத் தேர்தல் விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணாமாக கால்டுவெல் பள்ளியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில்  (அக்.20 ஆம் தேதி) நடைபெற்றது. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர்.இத்தேர்தலில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவி பிராமனம் கால்டுவெல் பள்ளியில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் நடைபெற இருந்தது. 

இந்நிலையில் வெற்றி பெற்ற டி.எஸ்.எப் அனியினர் திருமண்டல அலுவலகத்தினை திறந்து பதவி பிராமணம் செய்ய வந்தனர். அவர்களை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.டி.கே.ராஜன் அனியை சேர்ந்தவர்கள் அலுவலகத்தை திறக்க மறுத்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த டவுன் டிஎஸ்பி கனேஷ் தலைமையிலான போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுதினார். அதனை தொடர்ந்து கால்டுவெல் பள்ளி சுற்றி போலீஸ் குவிக்கபட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 



மக்கள் கருத்து

PrassanaOct 23, 2021 - 11:32:10 PM | Posted IP 162.1*****

திருட்டுப் பயலே எல்லாம் DSF ல தான் இருப்பாங்க போல அவங்க கூட நிக்கிற அவ்வளவு பேரும் திருட்டுப்பய தான். திருடனுக்கு திருட்டு பய தான் சப்போர்ட் பண்ணுவான்

manithanOct 22, 2021 - 10:22:29 AM | Posted IP 108.1*****

Church ஆண்டவனை வழிபடுவதற்கு மட்டுமே..ஏன் இந்த போராட்டம்.

வீரன்Oct 21, 2021 - 07:08:48 PM | Posted IP 108.1*****

கர்த்தர் பெருமை படுவார்

sankarOct 21, 2021 - 04:42:52 PM | Posted IP 162.1*****

நாட்டுக்கு இது இப்போ ரொம்ப அவசியம் டா போய் பிள்ள குட்டிகளை படிக்க வைங்க டா இல்லன்னா இன்னும் 4 பேர் புளுபிலிமை வெளியிடுங்க டா

truthOct 21, 2021 - 04:33:01 PM | Posted IP 162.1*****

Please arrest the rowdies under the goondas act.

தமிழ்ச்செல்வன்Oct 21, 2021 - 03:58:27 PM | Posted IP 108.1*****

சீனிக்கிழங்கு தின்னு கண்ட பண்ணி செவி அறுத்தாலும் நிக்காதாம்....

நண்பன்Oct 21, 2021 - 03:03:04 PM | Posted IP 173.2*****

எஸ்.கே ராஜன் அல்ல எஸ்.டி.கே ராஜன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory