» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

புதன் 20, அக்டோபர் 2021 5:40:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருகிற 22, 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இது தாெடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தி பொங்கல் 2022க்குள்ளாக பொதுமக்களின் குறைகளை முழுமையாக களைந்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது நிலங்களுக்கான பட்டா தொடர்பான பிரச்சனைகளான கணினியில் புலஎண்கள் திருத்தம், உட்பிரிவு எண்கள் திருத்தம், பரப்பு திருத்தம், பட்டாதாரர்களின் பெயர்கள் மற்றும் தந்தை/பாதுகாவலர் பெயர்கள் திருத்தம், உறவுமுறை திருத்தம், பட்டாவில் சில குறிப்பு கலங்களில் காலியாக விடப்பட்டுள்ளமைக்கான திருத்தங்கள், 

பிற அருகாமையில் உள்ள பட்டாதாரர்களின் பெயர்கள் தங்களது பட்டாவில் இடம்பெற்றுள்ளமைக்கான திருத்தங்கள் போன்றவற்றுக்காகவும், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த மனுக்கள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கோரல், ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்துதல், பல்வேறு வகையான சான்றுகள் கோரல், குடிநீர் வசதி, சாhலை வசதி கோரல் போன்ற இனங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 22.10.2021, 27.10.2021 மற்றும் 29.10.2021 ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெற உள்ள கிராமங்களின் விபரங்கள் பின்வருமாறு.

22.10.2021 (வெள்ளி) தூத்துக்குடி வட்டத்தில் முள்ளக்காடு - பகுதி 1, மேல தட்டப்பாறை ஆகிய கிராமங்களிலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்  கலியாவூர், உழக்குடி திருச்செந்தூர் வட்டத்தில் பரமன்குறிச்சி, குதிரைமொழி, சாத்தான்குளம் வட்டத்தில் மீரான்குளம் - பகுதி 1, மீரான்குளம் - பகுதி 2, ஏரல் வட்டத்தில் ஆறுமுகமங்கலம், சிறுதொண்டநல்லூர், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வாலசமுத்திரம்,சிந்தலக்கட்டை, கே.சண்முகபுரம், விளாத்திகுளம் வட்டத்தில் முத்துசாமிபுரம், கவுண்டம்பட்டி, சிவலார்பட்டி, வன்னிபட்டி. எட்டையாபுரம் வட்டத்தில் படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், கோவில்பட்டி வட்டத்தில் ஜமின் தேவர்குளம், கே.வெங்கடேஸ்வரபுரம், கயத்தார் வட்டத்தில் தெற்கு கழுகுமலை, கரடிகுளம், கத்தாளம்பட்டி என மொத்தம் 25 கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.

27.10.2021 (புதன்) தூத்துக்குடி வட்டத்தில் கீழத்தட்டப்பாறை, அல்லிகுளம். ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆலந்தா, பூவானி. திருச்செந்தூர் வட்டத்தில் பரமன்குறிச்சி, நங்கைமொழி, சாத்தான்குளம் வட்டத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல். ஏரல் வட்டத்தில் வாழவல்லான், திருப்பணி செட்டியாபத்து. ஓட்டப்பிடாரம் வட்டத்தில் எஸ்.குமாரபுரம், எப்போதும் வென்றான்.  விளாத்திகுளம்  வட்டத்தில் மெட்டில்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, குமாரசித்தன்பட்டி, எட்டையாபுரம் வட்டத்தில் டி.தங்கம்மாள்புரம், ராமனூத்து, தலைக்காட்டுபுரம். கோவில்பட்டி வட்டத்தில் கழுகுமலை, வில்லிசேரி - பகுதி 1, கயத்தார் வட்டத்தில் கே.சுப்பிரமணியபுரம், காலங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டியாபுரம் என மொத்தம் 24  பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

29.10.2021 (வெள்ளி) அன்று தூத்துக்குடி வட்டத்தில் மறவன்மடம், செந்திலாம்பண்ணை. ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சிங்கத்தாகுறிச்சி, வட வல்லநாடு. திருச்செந்தூர் வட்டத்தில்  மெய்ஞானபுரம், மானாடு தண்டபத்து. சாத்தான்குளம் வட்டத்தில் கட்டாரிமங்களம், பழங்குளம், ஏரல் வட்டத்தில் கொற்கை, கொடுங்கனி. ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஜெகவீரபாண்டியபுரம், காட்டுநாயக்கன்பட்டி, விளாத்திகுளம்  வட்டத்தில் மணியக்காரன்பட்டி, சென்னம்பட்டி, வெளவால்தொத்தி, சங்கரலிங்கபுரம். எட்டையாபுரம் வட்டத்தில் சிங்கிலிபட்டி, கழுகுகாசலபுரம், வேலிடுபட்டி. கோவில்பட்டி வட்டத்தில் வில்லிசேரி - பகுதி 2, இடைசெவல் - பகுதி 1. கயத்தார் வட்டத்தில்  காலம்பட்டி, கட்டாலங்குளம், சரவணாபுரம். மொத்தம் 24 என மொத்தம் 24  பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.    

எனவே, மேற்படி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி தமது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து தீர்வு காண கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி முகாமில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் கோவிட்-19 தொற்றிலிருந்து தவிர்க்கும் பொருட்டு கோவிட் -19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory