» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீபாவளி பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பம் : கால அவகாசம் நீட்டிப்பு

திங்கள் 18, அக்டோபர் 2021 8:45:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் 30.9.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 22-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனவே விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் கட்டிட வரைபடங்கள் அசல், கட்டிட உரிமைக்கான ஆவணம், வாடகை ஒப்பந்த பத்திரம் அசல், ரூ.500 அரசு கணக்கில் செலுத்திய செலுத்துச்சீட்டு அசல், அடையாள அட்டை (பான்கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு), ஊராட்சி, நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும். ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory