» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலை வழக்கு : தந்தை, மகன் நீதிமன்றத்தில் சரண்

திங்கள் 18, அக்டோபர் 2021 8:33:15 PM (IST)

தூத்துக்குடியில் பால்வியாபாரி கொலை வழக்கில் தந்தை மகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (61). பால் வியாபாரி. இவருடைய மகன் கடந்த 14-ந் தேதி புதிதாக வாங்கிய காரில் கோவிலுக்கு செல்வதற்காக தெருவில் நிறுத்தி இருந்தார். அப்போது எதிர்வீட்டை சேர்ந்த சுப்பையா மகன் பிரகாஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை தெருவில் வைத்து கழுவி உள்ளார். அப்போது, தண்ணீர் காரின் மீது பட்டு உள்ளது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. 

நேற்று இரவு ஆவுடையப்பன் சந்திரேசன் நகரில் உள்ள அவருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பையா, அவரது சகோதரர் நாராயணன், சுப்பையா மகன்கள் பிரகாஷ், ராம்ஜெயந்த் மற்றும் சிலர் சேர்ந்து ஆவுடையப்பனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து உள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது மகன் பெருமாள் (29) என்பவரையும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 

தொடர்ந்து ஊரக டிஎஸ்பி சந்தீஷ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் கொலையாளிகளை பிடிப்பதற்கான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர்ந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுப்பையா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். தொடர்ந்து அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory