» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.எஸ்.எப் அணி வெற்றி பெறுவது உறுதி : லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் உறுதி!

திங்கள் 18, அக்டோபர் 2021 6:21:12 PM (IST)



தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் டி.எஸ்.எப் அணி வெற்றி பெறுவது உறுதி என்று அந்த அணியின் லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் தெரிவித்தார்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தற்போது இறுதிகட்ட தேர்தல் வரும் 20, 21ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், எஸ்.டி.கே.ராஜன் அணியும், டி.எஸ்.எப் அணியும் போட்டியிடுகிறது.

தூத்துக்குடியில் செய்தியாள‌ர்களிடம், டி.எஸ்.எப் அணியின் லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் கூறியதாவது, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி சார்பில் திருமண்டல உப தலைவர் பொறுப்புக்கு குருவானவர் தமிழ்செல்வன், திருமண்டல குருத்துவ காரியதரிசி பொறுப்புக்கு குருவானவர் இம்மானுவேல்  வான்ஸ்டக், லே செயலாளர் பதவிக்கு நானும், (நீகர் பிரின்ஸ் கிப்ட்சன்), பொருளாளர் பொறுப்புக்கு மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோரும் போட்டியிடுகின்றோம்.

மேலும், திருமண்டல செயற்குழுவிற்கு குருவானவர்கள் பிரதிநிதிகளாக டேவிட்ராஜ், ககாரின் அருள்ராஜ் ஆகியோரும், லே பிரதிநிதிகளாக வாழையடி சேகரம் எட்வர்ட் கண்ணப்பா, இடையர்காடு  ஜேம்ஸ், ஹார்பர் நகர் ஜெயசிங்தியாகராஜ் நட்டர்ஜி, மெஞ்ஞானபுரம் சசிகுமார் பொன்துரை, கீழ வெள்ளமடம் சுதாகர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

திருமண்டல சினாடு உறுப்பினருக்கு குருவானவர்கள் சார்பாக சாமுவேல்தாமஸ், நவராஜ், ஜேசன் தர்மராஜ், இஸ்ரவேல் ராஜதுரைசிங், ஸ்டீபன்பால் ராபின்சன் ஆகியோரும், லே பிரதிநிதிகள் சார்பாக பொதுப்பிரிவில் சியோன் நகர் ஆரோன்ராஜ், அன்பின் நகரம் ஜேம்ஸ்அகஸ்டின், கிருஷ்ணராஜபுரம் ஜான்சன் டேவிட், நாசரேத் செல்வின், பிரையன்ட் நகர் சுரேஷ் வேதமுத்து, 35 வயதிற்கான பிரிவில் போல்பேட்டை அல்பர்ட் தினேஷ் சாமுவேல், நாலுமாவடி டேனியல் செல்வ ராஜேந்திரன், சுப்பிரமணியபுரம் சுதாகர் மைக்கேல், பெண்கள் பிரிவில் சோனகன்விளை கிரேனா ஜெபராஜ், கோவில்பட்டி சேகரம் சரோஜினி, மெஞ்ஞானபுரம் ஜெபா எப்சி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் எங்கள் அணி நிச்சயமாக வெற்றி பெறும். திருமண்டலத்தில் மாற்றம் வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை நாங்கள் கொடுப்போம். தேர்தல் நேர்மையாக நடத்தப்படவேண்டும். காவல்துறையினர் இதில் நடுநிலையோடு செயல்பட்டு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றவுடன்  சங்க காணிக்கை ரூ. 600ல் இருந்து குறைக்கப்படும், கல்விப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்படும், புதியதாக மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமண்டல அலுவலகம் உடனடியாக கட்டப்பட்டு அனைத்து ஊழியங்களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும், பணியிடம், பதவி உயர்வு, பணியிடமாற்றம் ஆகியவை வயது, பணிக்காலம், உடல்நிலை, குடும்பச்சூழல், குழந்தைகளின் கல்வி வாய்ப்பு இவைகளை கருத்தில்கொண்டு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு கலந்தாய்வு முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

திருமண்டல சேகர எல்லைக்குள் நடைபெறும் மாறுதல்கள், நியமனங்கள், அனைத்தும் அந்தந்த சேகரத் தலைவர், பெருமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பரிந்துரையின் பேரில் நடைபெறும், குருவானவர்கள் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படுவார்கள் என்றார்.

பேட்டியின்போது, வேட்பாளர்களுடன் கிருஷ்ணராஜபுரம் சேகர தலைவர் ஜேஸ்பர் அற்புதராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் ரவிசந்தர், டேவிட் வேதராஜ், ஜெயக்குமார் ரூபன், பெருமன்ற உறுப்பினர்கள் கிருபாகரன், கல்விளை ஸ்டீபன், சியோன் நகர் ஆரோன் மற்றும் பிரேம்குமார் ராஜாசிங், காந்திராஜன், ஜான்சன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து, டி.எஸ்.எப். அணி வேட்பாளர்கள் கிப்ட்சன் தலைமையில் திருமண்டல பேராயர் தேவசகாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory