» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொடர் கொள்ளை: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது - ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு!

திங்கள் 18, அக்டோபர் 2021 5:39:42 PM (IST)



தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளஞ்சிறார் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது. 

தூத்துக்குடியில் சோரீஸ்புரம், நியூ சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சுப்பரமணியன் (51) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடுபோனது. மேலும் 11.02.2021 அன்று முத்தம்மாள் காலனி பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் என்பவரது மனைவி அம்சவள்ளி (36) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகள் திருடிச் சென்றுவிட்டனர். 

அதேபோன்று கடந்த 08.08.2021 அன்று தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சுதானந்தம் (61) என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றதாகவும், திருடுபோன நகைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், முதல் நிலைக் காவலர் பாலகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் கலைவாணர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தும் துப்பு துலக்கியும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்த சுப்புக்கனி மகன் மாரிச்செல்வம் (19), கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் முனீஸ்துரை (21) மற்றும் 2 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேரும் மேற்படி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து கடந்த 16ம் தேதி தனிப்படையினர் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எதிரிகள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 32 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கெங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து, தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து

VeluOct 20, 2021 - 10:41:07 PM | Posted IP 162.1*****

Arab countries mathiri kutram senja parts ah cut panita tan crime korayum .. ipo ula punishment pathathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory