» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் நிறுவனத்தை கண்டித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்

திங்கள் 26, ஜூலை 2021 8:27:47 PM (IST)



கோவில்பட்டியில் கொள்முதல் செய்த உளுந்துக்கு ரூ.22லட்சம் வரை பணம் தரமால் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் காலதாமதம் செய்த காரணத்தினால் ராஜகோபால் என்ற விவசாயி தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ள நிலையில் , அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட விசாயிகள் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பொருள்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நியமான விலை கிடைக்க செய்வது, தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளுக்கு தரமான விவசாய இடு பொருள்கள் கிடைப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

இதன் நிர்வாக மேலாளராக சுப்புராஜ் என்பவரும், இயக்குநர்களாக கந்தசாமி, நவநீதன், ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் இயக்குநர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்யும் உளுந்து, பாசி உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்து அதiனை தரம்பிரித்து, பட்டை திட்டி வெளியில் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் கூட்டு முயற்சியாக இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் வளர்ச்சி கருதி அரசும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக ரூ.60லட்சம் வரை நிதி உதவி செய்துள்ளது. இந்த உதவியை பெற்று உளுந்து,பாசி உள்ளிட்ட பயிர்களை தரம் பிரித்து விற்பனை செய்யவதற்கான இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் கோவில்பட்டி அருகேயுள்ள சித்திரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடம்பூர் அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தினை சேர்ந்த விவசாயி குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் விவசாயம் செய்து மட்டுமின்றி, அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பாசி ஆகியவற்றை கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் எம்.ஜி.குருசாமி காட்டன் டிரர்டர்ஸ்; என்ற நிறுவனத்தில் இருந்து மானாவாரி விவசாயிகள்  உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு அக்டோபார் மாதம் வரை ரூ 42 லட்ச ரூபாய் வரை உளுந்து கொள்முதல் செய்துள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் வரை பல்வேறு கட்டங்களாக பணம் வழங்கியுள்ளனர். 

இன்னும் மீதி 21 லட்சம் வரை பணம் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் மற்றும் அவர்களிடம் கொள்முதல் செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர் கந்தசாமியிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தரமால் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்த உளுந்தினை தான் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு கொடுத்து இருந்தனர். 

அவர்கள் பணம் தரமால் இழுத்தடித்த காரணத்தினால்  குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும்  அவர்கள் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியமால் தவித்தனர்;. மேலும் தங்களிடம் கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர வலியுறுத்தி விவசாயிகளும் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வயது முதிர்வு காரணமாக குருசாமி கடந்த மே மாதம் இறந்து விட்டார். தந்தை இறந்து விட தற்பொழுது அவரது மகன் ராஜகோபால் தங்களின் பணத்தினை கேட்டு  நடைநடையாக நடந்து வருகிறார்.

இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள ராஜகோபால் கூறுகையில் தங்கள் பகுதியில் விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம், மொத்த வியாபாரிகள் 2மாதத்தில் பணத்தினை கொடுத்துவிடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் தான் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிர்வாகிகள் தங்களிடம் உளுந்து கொள்முதல் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். நாங்களும் விவசாயிகள் எல்லாம் ஒருங்கிணைந்து சங்கம் அமைத்து செயல்படுவதால் உளுந்து கொடுத்தோம், 42 லட்சம் ரூபாய்க்கு கொடுத்து இருந்தோம், பல கட்டமாக 20லட்சரூபாய் கொடுத்துள்ளனர். 

ஆனால் மீதி தொகையை தரமால் இழுத்தடித்து வருகின்றனர். இவர்கள் பணம் தர காலதாமதம் செய்வதால், நாங்கள் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு பணம் தர முடியாத நிலை உள்ளது. பணத்தினை கேட்டு அலைந்து, அலைந்து மன உளைச்சல் காரணமாக தனது தந்தை இறந்து விட்டதாகவும், தற்பொழு தான் பணத்தினை கேட்டு நடையாக நடந்து வருவதாகவும், நிர்வாக மேலாளர் சுப்புராஜை கேட்டால் இயக்குநர் கந்தசாமியை கேட்க சொல்கிறார். தினமும் வந்து பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றுத்துடன் செல்வதாகவும், தற்பொழுது விவசாய பணிகள் தொடங்கியுள்ளதால் அதற்கு செலவு செய்வதற்காக தங்களிடம் உளுந்து விற்பனை செய்தவர்கள் பணம் கேட்டு வருவதாகவும், மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் பணம் தரவில்லை என்றால் கம்பெனி முன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கிறார் மன வேதனையுடன்

இதற்கிடையில் மானாவாரி விவசாயிகள்  உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் விவசாயி ராஜகோபாலுக்கு பணம் தரமால் இருப்பதை கண்டித்தும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் துணை தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு உளுந்தினை தலையில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ்குமார், கோவில்படடி; நகர தலைவர் சண்முகராஜ், கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, சேவா தள மாவட்ட தலைவர் சக்திவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து; கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக அந்த நிறுவனத்திடம் கேட்ட போது மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றதாகவும், ராஜகோபாலுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory