» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் 3பேர் பலி

திங்கள் 26, ஜூலை 2021 11:09:09 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3பேர் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் பெரியசாமி (58). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி மோட்டார் பைக்கில் திருச்செந்தூர் ரோடு மேம்பாலத்தில் சென்றபோது நிலைதடுமாறு கீழே விழுந்தார். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

பைக்கிலிருந்து தவறிவிழுந்து..

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள வடக்கு செமப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உடையார் (43). இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த   குருசாமி மகன் காளிராஜ் (23) என்பவருடன் பைக்கில் சென்றபோது, எட்டயபுரம் அருகே கசவன்குன்று என்ற பகுதியில் சாலையில் இருந்த வேகத்தடையை கடக்க முயன்றபோது, பைக்கிலிருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த உடையார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு சம்பவம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் காலனியைச் சேர்ந்தவர் ஐயனார் மகன் சின்னப்பாண்டி (29). இவர் நேற்று பைக்கில் தூத்துக்குடி வந்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். எப்போதும் வென்றான் அருகே ஜெகவீர பாண்டியபுரம் பகுதியில் பைக் விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory