» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஞாயிறு 25, ஜூலை 2021 4:55:16 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் இன்று சப்பர பவனி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயமும் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் வடகால் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் ‘குருசு கோவில்‘ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் 421–வது ஆண்டு திருவிழா கடந்த 16–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 10–ம் திருநாளான இன்று அதிகாலையில் தொடர் திருப்பலிகள் நடந்தன. காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. காலை 11 மணிக்கு சப்பர பவனி நடந்தது. தேரில் எழுந்தருளிய பரிசுத்த தேவமாதா, புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியாருக்கு ஏராளமானவர்கள் உப்பு, மிளகு, மாலை, மெழுகுவர்த்தி காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.


மக்கள் கருத்து

சாமான்யன்Jul 25, 2021 - 07:37:03 PM | Posted IP 162.1*****

முகக்கவசம்,சமூக இடைவெளி,ஜூலை 31 வரை ஊரடங்கு யாருக்கு? அரசே! ஆட்சியரே!காவல்துறையே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory