» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மார்ச் முதல் செயல்பாட்டுக்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சனி 24, ஜூலை 2021 4:11:45 PM (IST)



தூத்துக்குடி ஸ்மாட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு இன்று (24.07.2021) ஆய்வு செய்தார். சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மீளவட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளம் ரூ.11.50 கோடி மதிப்பிட்டில் தூர்வாறி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தப்படும் பணிகள் மற்றும் வரத்து கால்வாய்கள் காங்கிரிட் கால்வாய்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பகுதியில் ரூ.7.69 கோடி மதிப்பிட்டில் ஸ்மாட் ரோடு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் அங்கு 27 வழித்தடங்களில் பேருந்துகள் செல்லும் வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதையும், தரைத்தளம் முழுவதும் பேருந்து பயணிகளுக்கும், மற்ற 4 தளங்களில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருவதையும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வருவதையும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வெள்ளநீர் வடிகால் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.வ.குளம் தூர்வாறப்பட்டு அங்கு வெள்ள நீர் தேக்கும் வகையில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மழைக்காலங்களில் நகருக்குள் வெள்ளம் வராமல் குளத்தில் தேக்கப்படும். தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இன்னும் 2, 3 மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும். 

கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் பகுதிகளும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. ஸ்மாட் சிட்டி பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்காமல் இருந்தது. தற்போது அதனை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மாட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் அருகில் உள்ள போக்குவரத்து கழக இடம் அனுமதி பெறுவதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன், ராமஜெயம், ஜெகன், அருணாசலம், மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் வித்யா, வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory