» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரிக்கை

வெள்ளி 16, ஜூலை 2021 5:05:51 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரஙகில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குனர் ரவுடிகள், கூலிப்படையினர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் 70 பேர் உட்பட 96 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 பேர் கைது செய்யப்பட்டு, 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்து 773 பேர் கைது செய்யப்பட்டு, 72000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கூலிப்படையினர், ரவுடித்தனம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல்துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, மணியாச்சி சங்கர், விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி உதயசூரியன், திருச்செந்தூர் பொறுப்பு பாலாஜி, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory