» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்

வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 12பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டத்தில்  நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 382 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 82 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 85 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 54 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 135 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 226 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 139 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 53 பேர் மீதும் என மொத்தம் 1156 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 லட்சத்து 31ஆயிரத்து 20 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (21.04.2021) ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 5 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் என மொத்தம் 12 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 6ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Thalir Products
Black Forest CakesThoothukudi Business Directory