» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்

வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (23.4.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் நாளை (23.4.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வார்டு எண் - 44, சுப்பையாமுதலியார் புரம், வார்டு எண் - 32, லயன்ஸ்டவுண் - 5வது தெரு, வார்டு எண் - 1, ஆதிபராசக்தி நகர் (பிள்ளையார் கோவில் அருகில்), காலை 11 மணிமுதல் 1 மணி வரை வார்டு எண்: 47, பிரையண்ட் நகர் - 12 வது தெரு, வார்டு எண்: 30, வண்ணார் - 4 வது தெரு (மாநகராட்சி பள்ளி), வார்டு எண்: 6, அம்பேத்கர் நகர்- 1 வது தெரு, 

வார்டு எண்: 49, கால்டுவெல் காலனி -5வது தெரு, வார்டு எண்: 15, சத்திரம் தெரு (2வது கேட் அருகில்), பகல் 2 மணி முதல் 4 மணி வரை வார்டு எண்: 36, வுஆடீ காலனி (ரூபவதி மஹால் அருகில்), வார்டு எண்: 24, தெற்கு காட்டன் ரோடு (வ.உ.சி. மார்கெட் அருகில்), வார்டு எண்: 10, கிருஷ்ணராஜபுரம் - 4வது தெரு , வார்டு எண்: 33, கணேசபுரம் ( அங்கன்வாடி மையம்), வார்டு எண்: 50 ராஜபாண்டி நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

கோவில்பட்டி நகராட்சியில்

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை கோவில்பட்டி மார்கெட் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை பத்திரகாளி அம்மன் கோவில் தெரு பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை சங்கரலிங்கபுரம் பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை பூந்தோட்டம் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை ரத்தினபுரி பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை அழகாபுரி பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

ஊராட்சி பகுதிகளில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை ஆறுமுகம் நகர், தீப்பாச்சி, வடக்கு காரசேரி, மேல பூவாணி, அம்பேத்கர் தெரு, வீரபாண்டியபட்டிணம், வெள்ளரிக்காயூரணி, வடக்கு ஆத்தூர், மாரியம்மன் கோவில் தெரு, சந்தையடியூர், தச்சர் தெரு, சாத்தான்குளம், 8 வீட்டு தெரு - வடக்கு அமுதுண்ணாகுடி, ஆர்.சி.தெரு, எட்டையாபுரம் ராஜீவ் நகர், ஈராச்சி, உசிலங்குளம், கண்ணக்கட்டை, டி.என்.குளம், துலுக்கன்குளம், டி.சுப்பையாபுரம், சிமெண்ட் பாக்டரி, புதூர் பாண்டியாபுரம். 

லெட்சுமிபுரம், பள்ளிவாசல்பட்டி, சிவலார்பட்டி, என்.ஜெகவீரபுரம் ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை அந்தோணியார்புரம், தளவாய்புரம், சீத்தார்குளம், கீழ பூவாணி, மத்திமான்விளை, குருகால்பேரி, குச்சிகாடு, மாரியம்மாள்புரம், முருகன் காலனி, குத்துக்கல் தெரு, அங்கன்வாடி - வடக்கு அமுதுண்ணாகுடி, புலிமால் தெரு, எட்டையாபுரம் அன்னை தெரசா நகர், ஈராச்சி, பணிக்கர்குளம், புங்கவர்நத்தம், வடக்கு மயிலோடை, கீழ விளாத்திகுளம், வீரபாண்டியாபுரம், வாலசமுத்திரம், ஒட்டடன்பட்டி, கவுண்டம்பட்டி, என்.முத்தையாபுரம்,  சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும், 

பகல் 2 மணிமுதல் 4 மணி வரை தெற்கு தெரு கோரம்பள்ளம், இடையர்காடு , செட்டிமல்லன்பட்டி, கீழ வல்லநாடு, அடைக்கலாபுரம், பழனியப்பபுரம், அன்பு நகர், சிவல்விளைபுதூர், வைத்தியலிங்கபுரம், விசாலாட்சியம்மன் கோவில் தெரு, கீழ பண்டாரபுரம், அம்மன் கோவில் தெரு, நடுவிற்பட்டி, புது அப்பனேரி. இளையரசனேந்தல், அய்யனார்ஊத்து, கடம்பூர், ஜின்னா தெரு, கயத்தார், சோலமலையன்பட்டி, முத்துராமலிங்கபுரம், சாமிநத்தம், கொடியன்குளம், நாகலாபுரம், கம்மத்துபட்டி, குமாரபுரம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர்செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThalir Products

Thoothukudi Business Directory