» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் : ஆட்சியர்

வியாழன் 22, ஏப்ரல் 2021 3:38:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஏப்.30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலமாக மாதாந்திர் பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மன வளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியரக வளாகம் கோரம்பள்ளம் தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறானளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்;கும் மற்றும் ஒரு நகலை மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை பெறும் வங்கிக்கும் ஏப்.30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesThalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory