» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக பிரமுகரின் டிரக்கர், பைக்கை அடித்து உடைத்து கொலை மிரட்டல் - போலீஸ் விசாரணை

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 8:39:23 AM (IST)



சாத்தான்குளம் அருகே டிரக்கர், பைக்கை அடித்து உடைத்து திமுக கிளை செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பூவுடையார்புரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்  ஆ. செல்வன் (50). விவசாயியான இவர் அப்பகுதி திமுக கிளை செயலராக பொறுப்பு வகித்து  வருகிறார். இவரும் அவரது உறவினர் பெருமாள் என்பவரும் பூச்சிக்காடு சுடலை மகன் தர்ம்லிங்கம் என்பவது குடும்ப சொத்து பாகபிரிவினை தொடர்பாக சமாதானம் பேசினராம். அப்போது அவர்கள் தர்மலிங்கத்துக்கு ஆதரவாக பேசவில்லையென கூறி  தர்மலிங்கம், செல்வனிடம் தகராறு செய்ததில் அவர்களுக்குள்  பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் செல்வன் அவரது டிரக்கர், பைக்கை அதே ஊரைச் சேர்ந்த சங்கர் வீட்டு முன்  ஞாயிற்றுக்கிழமை  நிறுத்தியிருந்தார். இதனையறிந்த தர்மலிங்கம், டிரக்கர் மற்றும் பைக்கை கம்பால் அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன்  செல்வனுக்கு  செல்லிடபேசி மூலம்  கொலை   மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வன் தட்டார்மடம்   காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில்   உதவி ஆய்வாளர்  ஐயப்பன் வழக்குபதிந்து தர்மலிங்கத்தை தேடி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes





Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory