» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு பேரூந்துகள் நேரம் மாற்றம்: 280 புறநகர், நகர பேரூந்துகளை இயக்க நடவடிக்கை

செவ்வாய் 20, ஏப்ரல் 2021 8:27:10 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 280 புறநகர், நகர பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் இரவு 10 மணிக்குள் பஸ் போக்குவரத்து நிறுத்துவதற்கு வசதியாக இரவு 8 மணிக்குள் பஸ் போக்குவரத்தை நிறுத்த அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 303 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இரவு 8 மணிக்குள் 280 பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் 8 மணிக்கு பிறகு வந்து ஊருக்கு செல்வதற்கு பஸ் கிடைக்காமல் பஸ் நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் ஒவ்வொரு ஊருக்கும் கடைசி பஸ் இயக்கப்படும் நேரம் குறிப்பிட்ட டிஜிட்டல் போர்டு போக்குவரத்து கழகம் சார்பில் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படாது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பொதுமக்கள் தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு பகல் நேரத்தில் 9 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொதுவாக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நீண்ட தூரம் செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் 33 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக பகல் நேரத்தில் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கையை விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரவு 8 மணிக்குள் பஸ்கள் குறிப்பிட்ட ஊரை சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளன. 

நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பஸ்களும், அந்தந்த ஊர்களில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் உடனடியாக புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அனைத்து பஸ்களும், காலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டு வருகின்றன. தொடர்ந்து திருச்செந்தூர்-சென்னை, திருச்செந்தூர்-கோவை, திருச்செந்தூர்-திருப்பூர், தூத்துக்குடி-சென்னை, தூத்துக்குடி-ஓசூர், தூத்துக்குடி-திருப்பூர், தூத்துக்குடி-கோவை ஆகிய வழித்தடங்களில் பகல் நேரத்தில் முதல்கட்டாமாக 9 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வருகை அதிகரித்தால் கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்


மக்கள் கருத்து

tamilApr 20, 2021 - 10:30:10 AM | Posted IP 108.1*****

TIME : 8.00 P.M.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thalir Products
Thoothukudi Business Directory