» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:16:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை 20.04.2021 காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகபாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால் எளிதில் பாதிக்கக் கூடிய நபர்களுக்கு கரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர் கண்காணிப்பு, முகக் கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும. உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இ;டங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல்; கடைபிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் நோயினை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொருட்களை வாங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்குள் சென்ற உடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வீட்டில் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும.; தொழிற்சாலைகள், உணவுக் கூடங்கள் மார்க்கெட் போன்றவற்றின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பு ஊசிபோட ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள்; தயார் நிலையில் உள்ளது.

கரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 20.04.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன.


பொதுமக்கள் அனைவரும் முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட ஆட்சியர்  டாக்டர்.கி.செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

adminApr 19, 2021 - 08:47:10 PM | Posted IP 162.1*****

admin url thappu: https://drive.google.com/file/d/1Zlqrbhm_MlIsVTcdEdzVPtBzWdkBw1R6/preview ithu than correct

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Thalir Products


Black Forest Cakes

Thoothukudi Business Directory