» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்!

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:54:31 PM (IST)

கரோனா அலையின் தாக்கல் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் டாஸ்மாக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்று முதல் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளுக்கு புதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வந்தால்தான் மதுபானங்கள் விற்க வேண்டுமென ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மதுபானக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மதுபானக் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது . நாளை முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே திறப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Apr 20, 2021 - 08:08:20 AM | Posted IP 162.1*****

இந்த வரைமுறைகளை எல்லாம் ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thalir Products

Thoothukudi Business Directory