» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்து சேவை: அரசு போக்குவரத்துக்கழகம்

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:26:33 PM (IST)

நெல்லையில் இருந்து தூத்துக்குடி, தென்காசிக்கு இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது. 

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி / தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரம் திருநெல்வேலி அரசுபோக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam
Thalir ProductsThoothukudi Business Directory