» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:10:10 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளின் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கயத்தாரிலிருந்து பன்னீர்குளம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கி சேதமடைந்திருந்த பகுதியை தாமாக சீரமைத்து பொதுமக்களுக்களின் பாராட்டை பெற்ற கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், முதல் நிலை காவலர் மோகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் நகர் பகுதிகளில் அதிகப்படியான மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்தும், பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்கள் மீது அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்தும், பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் தலைமை காவலர் தாமோதரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 14.04.2021 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து ரூபாய் 1,10,000/- பணத்தை திருடிய 3 எதிரிகளை 7 மணி நேரத்தில் கைது செய்து பணத்தை மீட்டு புலன் விசாரணை அதிகாரிக்கு உதவியாக இருந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 13.04.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய இரு சக்கர வாகன திருட்டு வழக்கின் எதிரியை மாவட்ட கட்டுபாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்டையில் இரவு ரோந்து உட்கோட்ட அதிகாரிக்கு தகவல் கூறி துரிதமாக செயல்பட்டு கைது செய்து வாகனத்தை கைப்பற்ற உதவியாக இருந்த குறுக்குசாலை பகுதியில் இருசக்கர வாகன ரோந்தில் இருந்த ஓட்டபிடாரம் காவல் நிலைய காவலர் விசு என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு வழக்கின் எதிரிக்கு 09.03.2021 அன்று 10 வருட சிறைதண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதமும் பெற்று தந்த மத்தியபாகம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் பத்மா மற்றும் முதல் நிலை காவலர் வேல்முருகன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்து மிகுந்த அர்ப்பணிப்புடன் பணி செய்த ஆயுதப்படை தலைமை காவலர்கள் ராஜா,  கோபிநாதன், பாலகுமார், பொன்ராஜ், சுந்தரபாண்டி, பொன்னுசாமி, முருகப்பெருமாள், முதல் நிலை காவலர் மணிகண்டன், காவலர்கள் தாமரைசெல்வன், ஆனந்த், செல்வின் ராஜ், அழகர்சாமி, ஜாக்ஸன், மாடசாமி, முனீஸ்வரன், பிரபாகரன், பிரவீன், பிரபாகரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இப்பாராட்டு நிகழச்சியின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam PasumaiyagamThalir ProductsThoothukudi Business Directory