» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

திங்கள் 19, ஏப்ரல் 2021 12:51:45 PM (IST)தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏறப்ட்டது. 

தூத்துக்குடி அருகேயுள்ள கீழதட்டபாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (44), இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளி. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது திடீரென அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். இதையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமான லாரியை மாப்பிள்ளை யூரணியைச் சேர்ந்த ரேசன் கடை ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் பைனான்ஸ் கட்டிக் கொள்வதாக கூறி வாங்கினார். ஆனால் பணத்தை கட்டவில்லை. இதனால் பைனான்ஸ் கம்பெனியினர் எனது வீட்டை ஜப்தி செய்ய வந்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் தீ்ககுளிக்க முயன்றதாக கூறினார்.  போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory