» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரவு 10 மணி வரை பார்சல் உணவு வழங்க அனுமதி : காவல்துறையிடம் வியாபாரிகள் கோரிக்கை!!

திங்கள் 19, ஏப்ரல் 2021 12:41:23 PM (IST)

தூத்துக்குடியில்  இரவு 9 மணி முதல் 10 மணி வரை பார்சல்களின் உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2வது அலை தீவிரம் அடைந்துள்ளதால், ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு தொடர்பாக வியாபாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது "தூத்துக்குடியில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பார்சல்களின் உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சரக்குகளை இறக்க அனுமதிக்க வேண்டும், கடைகளில் செல்போனில் படம் எடுத்து, மாஸ்க் அணியாமல் இருப்பதாக அபராதம் விதிப்பதாக மிரட்டும் மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thalir ProductsThoothukudi Business Directory