» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கெளரவ டாக்டர் பட்டம்: மோசடி பல்கலைக் கழகத்திற்கு தடை விதிக்க கோரிக்கை!!

திங்கள் 19, ஏப்ரல் 2021 10:37:24 AM (IST)

பணத்திற்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மக்கள் மேம்பாட்டு கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் அதிசயகுமார், மாநில காவல்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு: சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தமிழ் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தமிழகத்தில் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி வந்ததினால் நான் 2007 ம் ஆண்டில் காவல்துறை இயக்குநருக்கு புகார் அளித்ததின் பேரில் தமிழக காவல்துறை மேற்படி பல்கலைக்கழகம்பட்டம் வழங்குவதை தடை செய்தது. 
          
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல புதுமையான தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரையை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து அதன் பின்பு டாக்டர் பட்டங்களை பெற்று வருகின்றார்கள். கல்வித் துறையின் மூலம் டாக்டர் பட்டம் பெறுவதை இன்று சில அமைப்புகள் மோசடியாக பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டு பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள், ரவுடிகளிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தை கொடுப்பதாக கூறி மோசடியான டாக்டர் பட்டங்களை வழங்கி சமூகத்தை சீரழித்து வருகின்றார்கள். 
        
18-04-2021 அன்று சென்னையில் உள்ள Global peace university (GPU) என்ற பெயரில் சமூக சேவகருக்கான பட்டங்களை பலருக்கு வழங்கியுள்ளது. மேற்படி பல்கலைக்கழகம் பணத்திற்காக மோசடியாக பட்டங்கள் வழங்குவதாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காவல்துறை வழக்குகள் பதிவு செய்து தடை செய்துள்ளது. இப்படிப்பட்ட மோசடியான பல்கலைக்கழகம் இன்று சென்னையில் கூட்ட அரங்கில் வைத்து தூத்துக்குடியை சார்ந்த S.R. பாண்டியன் என்பவருக்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளித்துள்ளது. 
       
மேற்படி நபர் சட்ட விரோதமான மணல் அள்ளும் தொழில் செய்து வருகின்றார். இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு பல மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் வீட்டின் உரிமையாளரை கண்ணீர் வடிக்க வைத்து வருகின்றார். பல கூட்டங்களில் இளைஞர் மத்தியில் கொலை வெறியுடன் வன்முறையினை தூண்டும் வகையில் பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது.

இவருக்குத்தான் சமூக சேவகருக்கான அனைத்து தகுதிகளும் உள்ளதாக கூறி மோசடியான பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதால் ஆராய்ச்சியில் ஈடுபட்டு படித்து பட்டம் பெற்றவர்களுக்குறிய மரியாதையும் மதிப்பும் கெடும் நிலையும் தலைகுணியும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இது போன்று மோசடியாக பணத்திற்காக டாக்டர் பட்டம் வழங்கி வரும் பல்கலைக்கழகம் மீது வழக்கு பதிவு செய்து டாக்டர் பட்டத்தை பறிக்க வேண்டியது நீதியின் பொருட்டு அவசியமாகின்றது. 
          
ஆகவே, மாநில காவல்துறை இயக்குநர், தமிழகத்தில் Global Peace University என்ற பெயரில் மோசடியாக டாக்டர் பட்டம் வழங்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோல் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சென்னை காவல்துறை ஆணையர், காவல்துறை தென்மண்டல தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் மனு அனுப்பியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory