» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் கடத்திவந்த ரூ.4 லட்சம் புகையிலை மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:40:32 AM (IST)தூத்துக்குடி அருகே பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 கிலோ புகையிலை பொருள்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், ஏ.எஸ்.பி. ஹா்ஷ்சிங் அறிவுரையின்படி, காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது, உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ், தனிப்படை உதவி ஆய்வாளா் சுந்தரம், போலீசார் புகையிலைப் பொருள்கள் கடத்தல் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.இந்நிலையில் முக்காணி அருந்ததியா் தெரு அருகே நின்று கொண்டிருந்த 2 காா்களை சோதனையிட்டனா். அக்காா்களில் சுமாா் 400 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ. 4 லட்சம். இதையடுத்து, காா்களில் இருந்த மேலாத்தூா் சுப்பிரமணியபுரத்தை சோ்ந்த மோகன்ராஜ் மகன் மணிகண்டன்(31), ஏரல் பண்டாரவிளை ஜோதிநாடாா்தெருவை சோ்ந்த ஜெபராஜ் மகன் எடிசன்பிரபு (28), அதேபகுதியை சோ்ந்த ஜெபராஜ் மகன் ஏசுராஜா (27) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 காா்களையும் பறிமுதல் செய்தனா். 

மேலும், இதில் தொடா்புடைய தூத்துக்குடி குறிஞ்சிநகா் 3-ஆவது தெருவை சோ்ந்த செளந்திரபாண்டியன் மகன் மகராஜன் (37) என்பவரும் கைது செய்யப்பட்டாா். கைது செய்யப்பட்டவா்களில் இருவா் பட்டதாரிகள். 2 காா்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக திருச்செந்தூா் கூறுகையில், திருச்செந்தூா் கோட்டத்தில் இதுவரை 1500 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 400 கிலோ புகையிலை பொருள்கள் பெங்களூருவில் இ­ருந்து கடத்தி வரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest CakesThalir ProductsThoothukudi Business Directory