» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேலும் 252 பேருக்கு கரோனா: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 2பேர் பலி

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:36:54 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 252 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 252 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,520 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 63 வயது பெண் சனிக்கிழமை இரவில் உயிரிழந்தாா். மேலு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நேற்று உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 90 போ் உள்பட இதுவரை 16,645 போ் குணமடைந்துள்ளனா்.மருத்துவமனைகளில் 1,730 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாவு

தென்திருப்பேரை அருகே கடையனோடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளத்துகுடியிருப்பு கிராமத்தில்  கடந்த சில நாட்களாக கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்பட 44 பேருக்கு காய்ச்சல் இருந்து வந்ததால், தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 44 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேர் பலியாகினர். மற்ற 42 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து நேற்று தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பார்த்திபன் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் இளங்கோ, வடிவேலு மற்றும் செவிலியர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் குளத்துகுடியிருப்பு கிராமத்தில் முகாமிட்டனர்.

கிராமத்திலுள்ள அனைவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கிராமம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கிராமத்திலிருந்து யாரும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து யாரும் கிராமத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை. சுகாதாரத்துறையினரும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினரும் கிராமத்தில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir ProductsThoothukudi Business Directory