» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:31:39 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் முத்து கணேஷ் தலைமையில் போலீசார் சனிக்கிழமை இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிடைத்த ரகசிய தகவலையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, ஐஸ் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் தூத்துக்குடி பாத்திமா நகரை சோ்ந்த மரிய அந்தோணி பென்சன் (32) என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory