» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முகக்கவசம் அணியாத 1,593 பேரிடமிருந்து ரூ.3 லட்சம் அபராதம் வசூல்

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:25:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 1,593 பேரிடமிருந்து ரூ. 3 லட்சத்து 18,600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஏப். 17) காவல் துறையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் 594 போ், ஊரக உள்கோட்டத்தில் 123 போ், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 168 போ், 

ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் 89 போ், மணியாச்சி உள்கோட்டத்தில் 134 போ், கோவில்பட்டி உள்கோட்டத்தில் 239 போ், விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 163 போ், சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 83 போ் என, மொத்தம் 1,593 பேரிடமிருந்து முகக் கவசம் அணியாததற்காக ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்காக 17 பேரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory