» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி முகாம்

திங்கள் 19, ஏப்ரல் 2021 8:04:58 AM (IST)தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

கரோனா வைரஸ் பரவல் 2-வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் உள்ள விருப்பம் உள்ள அனைத்து போலீசாருக்கும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அதன்படி நேற்று தூத்துக்குடி மாநகர போலீசாருக்கு கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு கணேஷ் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் முகாம், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில்   நடந்தது. தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி கணேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட 30 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறும் போது, கரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொடிய நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் தமிழக அரசு விதித்து உள்ள நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகச் சிறந்ததாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam


Thalir ProductsThoothukudi Business Directory