» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது வாகனம் மோதி கீபோர்டு கலைஞர் பலி

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 8:03:20 PM (IST)

சாத்தான்குளம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  ஆறுமுகனேரி இளைஞர்  உயிரிழந்தார்..

ஆறுமுகனேரி- அடைக்கலாபுரம்  சாலை  ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் கிங்ஸ்லிதாசன். காயல்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜூலியட் ஆசிரியை ஆவார். இவர்களது மகன் ஜியோபால் ஜெனிட்டர்(32), ஆறுமுகனேரியில் உள்ள பூவரசூர் திரித்துவ ஆலய பாஸ்ரேட் கமிட்டி உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் அங்குள்ள இசைக் குழுவில் ஒருங்கிணைப்பாளராகவும் கீபோர்டு கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை   ஜியோபால், சாத்தான்குளம் அருகே அழகப்பபுரம் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜியோபால், சம்பவ இடத்தில் பலியானார். இவருக்கு மனைவி மேக்தலின் சுவிஜா(28) மற்றும் ஒரு மகன் உள்ளனர். தகவல் அறிந்து தட்டார்மடம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் தட்டார்மடம்  காவல் ஆய்வளர  சாம்சன் ஜெபதாஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products




Black Forest Cakes




Thoothukudi Business Directory